file 000000008208720bbff9e477894860f6

About Us​

செட்டிநாடு…
பாரம்பரியமும் கலாச்சாரமும் இன்று வரை பாதுகாத்து வருவதில் முதன்மையான இடங்களில் செட்டிநாட்டு பகுதியும் ஒன்று.

செட்டிநாடு பகுதியில் கட்டிடக்கலையும் உணவு வகைகளும் பிரபலம்.

எங்கள் பகுதியின் பலகாரம், மசாலா மற்றும் பொடி வகைகள் உலகப்பிரஸித்தி.

அதை எங்கள் அக்சயா புட் ஃப்ராடெக்ட்ஸ் நிறுவனம் 2016 வருடம் முதல் நல்ல முறையில் தயாரித்து தரத்திற்கு முதலிடம் தந்து, நாவிற்கு சுவையும், உடலுக்கு பலமும் தரும் வகையில் வழங்கி வருகிறோம்.
அக்சயா…
1987 ஆம் வருடம் முதல் 14 ஆண்டுகள் உணவுப்பொருள் தந்த அனுபவத்தால், அக்சயா புட் ஃப்ராடெக்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

மார்கெட்டிங் துறையில் இன்று வரை பயணித்ததில் பெற்ற அனுபவத்தால்,எங்கள் செட்டிநாட்டுப் பகுதியில் புகழ் பெற்ற பலகாரங்கள், பாரம்பரிய நொறுக்குத்தீனிகள், மசாலா வகைகளை தயாரித்து முதல் தரத்தில் மக்களுக்கு வழங்க சந்தைப்படுத்தி வருகிறோம்.

இன்று தரமான பொருட்களை வழங்கிவருவதின் பேரில், உயர்வான உங்களைப்போன்ற வாடிக்கையாளர்களை பெற்று வருகிறோம்.

வாடிக்கையாளர்கள் நலன் கருதி, பொருட்களில் நிறம் கூட்டுவதற்காகவோ, வாழ்நாள் தன்மையை கூட்டுவதற்காகவோ கெமிக்கல்ஸ் எப்போதும் சேர்கப்படுவதில்லை.
Shopping Cart